Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். திருநாவுக்கரசர் பேட்டி.

0

அரிஸ்டோ மேம்பால பணிகள்
ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்.
திருநாவுக்கரசர் எம்பி பேட்டி.

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி பணி தற்போது தொடங்கியுள்ளது.

இந்த பணிகளை இன்று திருநாவுக்கரசர் எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது அவர் கூறியதாவது;-


இந்த மேம்பாலப் பணிகள் ஏறக்குறைய 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் தொங்கு பாலம் என்ற பெயருடன் விளங்கியது.

காரணம் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் மாநில அரசு கையகப்படுத்த வருவதால் பணிகள் தடைபட்டது.

நான் இதனை கடந்த தேர்தல வாக்குறுதியில் பிரதான வாக்குறுதியாக சொல்லி இருந்தேன் .
அதன்படி நான் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தில் பேசியதோடு அவசர தீர்மானம் கொண்டு வந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை மூன்று முறை சந்தித்தேன்.
இது போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளன. இருந்தபோதிலும் எனக்கு ஏற்கனவே பரிச்சயமான மந்திரி என்ற காரணத்தினால் ராஜ்நாத்சிங் இந்த அரிஸ்டோ மேம்பால பணிகளுக்காக மட்டும் ஒரு கூட்டத்தை கூட்டி பணி உத்தரவை வழங்கினார்.


அதற்குப் பின் இங்கு கையகப்படுத்தப்பட்டு உள்ள 66 சென்ட் நிலத்திற்கு சமமாக 8.50 கோடியில் பாதுகாப்பு துறைக்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ள முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது இடிக்கப்பட்ட உள்ள பாதுகாப்பு துறை காம்பவுண்டு சுவருக்கு மாற்றாக அவர்களுக்கு காம்பவுண்டு சுவரை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
அந்த பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் .

அதன் பின்னர் பாலப்பணி நான்கு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதற்கு ஒத்துழைத்த தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் , நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே இருந்த முன்னாள் எம்பியும் முயற்சி செய்திருக்கலாம் .

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 350 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
இதற்கு 150 ஏக்கர் நிலம் பாதுகாப்புத் துறையினரிடம் கேட்டு வாங்க வேண்டியுள்ளது.
அதற்கான பணிகளையும் தொடங்கி இருக்கின்றேன்.
இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவில் பாஜக கோலோச்சும் என்று சொல்வதற்கு பிரசாந்த் கிஷோர் ஒன்றும் மந்திரவாதி கிடையாது.
அவர் வியூகம் வகுத்த சில மாநிலங்களில் தேர்தலில் வெற்றி கிடைத்திருக்கிறது. சில மாநிலங்களில் தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கண்டிப்பாக ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவார்.

நாற்பது ஆண்டுகள் வர முடியாது என்று நினைக்கும் பிரசாந்த் கிஷோர் ஏன் காங்கிரஸில் சேர நினைத்தார். காங்கிரஸில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர் வராமல் இருந்தது நல்லதுதான்.
திருவாரூர் பிரச்சனையில் அண்ணாமலை முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசாங்கத்தின் முடிவை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் ,
சோபியா விமலா ராணி, ரெக்ஸ், வக்கீல் சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.