பாரம்பரிய சோதிடர்கள்
சங்க செயற்குழு கூட்டம்.
திருச்சியில் பாரம்பரிய வள்ளுவர் குல சோதிடர்கள் சங்க செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு சங்க செயலாளர் மதுரை க. பாலமுருகன் தலைமை வகித்தார். தலைவர் கரூர் த. ஜெயம்பழனிசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டுதோறும் வள்ளுவர்குல சோதிடர்கள் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் மற்றும் சோதிட ஆய்வு நூல்களை வெளியிடுவது, குருகுலம் அமைத்து வள்ளுவர்களுக்கு சோதிடம், பாரம்பரிய வைத்தியம், புரோகிதம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கான பயிற்சி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வள்ளுவர்களுக்கு குலத்தொழில் சோதிடம் பார்ப்பது என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்வதுடன், பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க குருத்துவ கலைகளை கற்பித்து வரும் வள்ளுவர் குலத்தவரை ஏற்கெனவே இருந்தது போல முற்படுத்தப்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறச்செய்வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகளாக தலைவராக கரூர் ஜெயம் த. பழனிசாமி, செயலாளராக மதுரை க. பாலமுருகன், பொருளாளராக நியமம் மு. மதன் அகத்தியர், துணைத்தலைவர்களாக கண்ணன், கலைவாணி, ஸ்ரீதர், செந்தில்வேல், ஆனந்தன், துணைச் செயலாளர்களாக ரமேஷ், ராமுகண்ணன், அருணகிரி, விஜயகுமார் தலைமை ஆலோசகர்களாக சேலம் கோபால்சாமி, திருப்பூர் சு. வடிவேலு சோதிட பேராசிரியர்களாக கே.வி. ரவிச்சந்திரன், கருப்பயா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சங்க பொருளாளர் நியமம் மு. மதன் அகத்தியர் வரவேற்றார், துணைச்செயலாளர் அருணகிரி நன்றி தெரிவித்தார்.