தங்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் வாகன நுழைவு கட்டணம் ரத்து. மாநகராட்சி முடிவுக்கு மநீம வரவேற்பு.
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மய்யத்தின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் வாகன நுழைவு கட்டணத்தை ரத்து செய்த மாநகராட்சியின் முடிவை வரவேற்கிறோம்”
கடந்த காலத்தில் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரத்து செய்யப்பட்ட கட்டணத்தை தற்பொழுதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் வசூலிக்க திருச்சி மாநகராட்சி தீர்மானித்தது.
இந்த மக்கள் விரோத திட்டத்தை முதன் முதலில் மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்டம் சார்பில் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்ததோடு திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து இந்த திட்டத்தை கைவிட மனு கொடுத்தோம்.
இதனை தொடர்ந்து கார்களுக்கு மட்டும் நுழைவு கட்டணத்திலிருந்து விலக்கு அறிவிக்கப்பட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் இருமுறை “ஏல அறிவிப்பு” கொடுக்கபட்டது.
இதனிடையே நேற்று [25.05.2022] ந் தேதி திருச்சி மாநகர மேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு அனைத்து விதமான வாகனங்களுக்கான கட்டணமும் முற்றிலுமாக ரத்து செய்வதாக தீர்மானித்து முடிவு செய்துள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வரவேற்கிறோம்.
என நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.