Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது .

0

'- Advertisement -

 

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த ராமர் இவரது மனைவி அமிர்தம் என்பவர் விவசாய கூலித்தொழிலாளி.

இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில் தனது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவரை அணுகியுள்ளார்.

அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ரூபாய் ஆயிரம் லஞ்சமாக இன்று 28.04.2022 மதியம் அவரது அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

பட்டாவில் திருத்தம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு சில நாட்கள் முன்பு லால்குடி துணை தாசில்தார் மற்றும் விஏஓ லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திருச்சியில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் சிக்கி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.