திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு,மற்றும் நகரமைப்புக் குழு தலைவர்களாக முத்துச்செல்வம் மற்றும் தர்மராஜ் போட்டியின்றி தேர்வு.


திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும்
நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்
இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆணையர்
முஜிபுர்ரகுமான்
இத்தேர்தலை நடத்தினார்.
இதில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் பதவிக்கு
தி.மு..க வை.சேர்ந்த
முத்துசெல்வமும்,
நகரமைப்பு குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த கொட்டப்பட்டு இ.எம். தர்மராஜும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இவர்களை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனை
தொடர்ந்து
முத்துச்செல்வம் ,
கொட்டப்பட்டு தர்மராஜ் ஆகிய
இருவரும் போட்டியின்றி
ஏகமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டடதாக
அறிவிக்கப்பட்டு
அதற்கான
சான்றிதழ்களை
ஆணையர்
வழங்கினார்.
பின்னர்
நிலைக்குழு
தலைவர்கள்
முத்துச்செல்வம் மற்றும் கொட்டப்பட்டு தர்மராஜ் இருவரும் மேயர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

