Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடைபாதை ஆக்கிரமிப்பை திருச்சி கலெக்டர் ஆய்வு செய்ய பஞ்சாயத்து உதவித் தலைவர் மனு.

0

'- Advertisement -

 

Ad banner

நடைபாதை ஆக்கிரமிப்பை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்
பஞ்சாயத்து உதவி தலைவர் மனு.

திருச்சி தொட்டியம் காடுவெட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் திருமேனி. இவர் காடுவெட்டி பஞ்சாயத்து உதவி தலைவராக இருந்து வருகிறார் .இந்த நிலையில் கலெக்டர் சிவராசு சந்தித்து அவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

எனது 6வது வார்டில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான பாதையை ஒரு தனி நபர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நான் ஏற்கனவே புகார் அளித்ததன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர் முன்னிலையில் சர்வேயர் மூலம் அளந்து ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் தொட்டியம் துணை தாசில்தார், காட்டுப்புத்தூர் வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு ஆக்கிரமிப்பு இருந்தும் ஒருதலைபட்சமாக ஆக்கிரமிப்பு இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே இதன் உண்மை தன்மையை கலெக்டர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.