மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தால்
முல்லைப் பெரியாறு அணையின் உரிமைக்கு எந்த குந்தகமும் வராது
நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் சு.சிவராசு மற்றும் கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
தமிழக முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் காவிரி டெல்டா பாசன வாய்க்கால்களை இந்த ஆண்டுதூர்வார
ரூ.80 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.இதன் மூலம் 4 ஆயிரத்து 694.11 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் தூர்வார படுகிறது.இந்த பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி விட்டன. திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில் இந்த திட்டத்தில் 90 பணிகள் எடுக்கப்பட்டு 832 .59 கிலோமீட்டர் தொலைவுக்கு 19 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு இருக்கிறது.
அடுத்த மாதம் 31ம் தேதிக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு சட்டத்தால் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு இந்த அணையை பொருத்தமட்டில் அதன் உரிமையாளர் தமிழக அரசுதான். சட்டம் அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது ஆகவே உரிமையில் எந்த மாற்றமும் வராது. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆந்திரா, கர்நாடக அரசின் ஒத்துழைப்பு தேவை என மத்திய அரசுக்கு நாங்கள் ஆலோசனை தெரிவித்து இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.