இன்றைய (24-04-2022) ராசி பலன்கள்
மேஷம்
ஏப்ரல் 24, 2022
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
ரிஷபம்
ஏப்ரல் 24, 2022
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உயர்கல்வி சார்ந்த துறைகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : ஈடுபாடு உண்டாகும்.
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
—————————————
மிதுனம்
ஏப்ரல் 24, 2022
விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று முடிவெடுக்கவும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான அனுபவமும், விரயமும் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.
—————————————
கடகம்
ஏப்ரல் 24, 2022
தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வாழ்க்கை துணைவர் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உதவி கிடைக்கும்.
பூசம் : சிந்தனைகள் தோன்றும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————
சிம்மம்
ஏப்ரல் 24, 2022
சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் அலட்சிய போக்கின்றி செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : ஆதாயம் மேம்படும்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : பயணங்கள் கைகூடும்.
—————————————
கன்னி
ஏப்ரல் 24, 2022
வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனையும், தெளிவும் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : புத்துணர்ச்சியான நாள்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.
—————————————
துலாம்
ஏப்ரல் 24, 2022
கால்நடை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வதால் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
—————————————
விருச்சிகம்
ஏப்ரல் 24, 2022
வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : பயணங்கள் சாதகமாகும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
தனுசு
ஏப்ரல் 24, 2022
வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பயணங்களில் புதிய அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மூலம் : இழுபறிகள் அகலும்.
பூராடம் : லாபம் மேம்படும்.
உத்திராடம் : நம்பிக்கை ஏற்படும்.
—————————————
மகரம்
ஏப்ரல் 24, 2022
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அபிவிருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவோணம் : மந்தத்தன்மை குறையும்.
அவிட்டம் : விருப்பம் நிறைவேறும்.
—————————————
கும்பம்
ஏப்ரல் 24, 2022
உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் பிறக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். மதிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : அனுபவம் பிறக்கும்.
பூரட்டாதி : இன்னல்கள் நீங்கும்.
—————————————
மீனம்
ஏப்ரல் 24, 2022
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரேவதி : அலைச்சல்கள் ஏற்படும்.
—————————————