திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரத்ததான முகாம். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி வைத்தார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல் படியும், இளைஞர் செஞ்சிலுவை சங்க (Youth Red Cross) மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படியும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளையும் பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்க மண்டலம் மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல், கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர்
வளர்மதி,
பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால் தயாபரன், பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப்புலத் தலைவர் முனைவர் ஆனந்த் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பிஷப் ஹீபர் கல்லூரியின் 250 மாணவ மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.
இந்த மாபெரும் ரத்ததான முகாமை பிஷப் ஹீபர் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் கிப்ட்சன் சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.