திருச்சி தில்லைநகர் 11வது கிராஸில் (சாரதாம்பாள் கோவில் எதிரில்) அமைந்துள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
திருச்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்ட சிறுதானிய உணவகம் ஆப்பிள் மில்லட் ஆகும்.
திருச்சி பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற இந்த உணவகத்தின் 9வது ஆண்டு துவக்கவிழா இன்று அதன் உரிமையாளர் வீரசக்தி தலைமையில் நடைபெற்றது.
காலையில் பூஜைகள் செய்யப்பட்டது. பின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை உரிமையாளர் வீரசக்தி பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
துவக்க விழாவை முன்னிட்டு அனைவருக்கும் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.