திருச்சி கிழக்கு தொகுதியில் எந்தப் பணியும் செய்யாத இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பொதுக்கூட்டத்தில் முன்னாள் தலைமை கொறடா மனோகரன்.
திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. தெருமுனை பொதுக்கூட்டம் திருச்சி தாரநல்லூர் கீரைக்கடை பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வேதாத்திரி நகர் பாலு தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, கமருதீன், வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர்.
நிர்வாகிகள் பழனிமாணிக்கம், டோல்கேட் கதிரவன், பஷீர் அகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளருமான மனோகரன் பேசியதாவது:- அ.ம.மு.க.ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும், மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறோம். திமுக ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு மற்றொரு பேச்சு என்று பேசி வருகிறார்கள். ஜெயலலிதா அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது.
ஏற்கனவே பொதுமக்கள் கொரோனாவால் பாதிப்பு,பெட்ரோல், டீசல், கியாஸ், விலை உயர்வு,சுங்க வரி உயர்வு இப்படி பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் நிலையில் தற்போது திமுக அரசு மக்களை
பற்றி சிறிதும் கவலைப்படாமல் சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது.
இது கண்டனத்துக்குரியது. இதனைத் திமுக அரசு திரும்ப பெறவேண்டும்.
கடந்த 10 மாதங்களில் திமுக ஆட்சியால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இங்கே உள்ள அமைச்சர் நேரு பொது மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு சொத்து வரியை குறைக்க வேண்டும்.திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆனவுடன் சேகர் பாபுவை அழைத்து வந்து மலைக்கோட்டை கோயிலுக்கு ரோப் கார் போடுவதாக இரண்டு முறை பார்த்து சென்றதுடன் சரிஎந்த ஒரு பணியும் தொடங்கவில்லை,இதே போல் போக்குவரத்து நெரிசலை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எந்தப் பணியும் செய்யாமல் கிழக்கு தொகுதிக்கு பேர் அளவுக்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக ஐந்து வருடத்தில் நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் எனர்ஜி அப்துல் ரகுமான், எம்.கே.குமார், வக்கீல்கள் சரவணன், தினேஷ்பாபு மற்றும் வண்ணை லதா, பெஸ்ட் பாபு, நாகநாத சிவகுமார், வேதராஜன், சாத்தனூர் வாசு, தனசிங், கல்நாயக் சதீஷ்குமார், சேட்டு பாக்கியராஜ், உமாபதி, சுவாமிநாதன், சாந்தா,லோகு, ரவிச்சந்திரன், பக்ரூதீன், ரஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட செயலாளர் சக்தி முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.