Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் கோயில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது.

0

ஆசியாவில் மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழிதேரோட்டம் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி கோஷத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

தமிழகத்தின் பழம்பெரும் விழாக்களில் ஒன்றான திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8.10 மணிக்கு ஆழித் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.


ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம் 360 டன் எடை கொண்டது .

தேரோட்டத்தையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 6 இடங்களில் 12 பிரிவுகளாக கழிவறை வசதிகளும், 6 இடங்களில் குடிநீர் குழாய் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 13 உதவி மருத்துவர்கள், 6 சுகாதார ஆய்வாளர், 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி இன்று திருவாரூரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.