Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளிக்கூடம் போக வேண்டாம், பேப்பர் வாங்க வேண்டாம். சற்று நேரத்தில் நம் இல்லத்திற்கே வருகிறது +2 தேர்வு முடிவுகள்.

0

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதனையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணியில், 86 மையங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்பே திட்டமிட்டபடி, இன்று மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 மார்ச் 12ஆம் வகுப்பு நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே அவர்கள் தேர்விற்கான விண்ணப்பத்தில் அளித்த செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களைப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.