Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 30 வருடம் கட்சி பணியாற்றியவருக்கு பதவியா? 3 மாதத்திற்கு முன் கட்சி சார்பாக வென்ற கவுன்சிலருக்கு கோட்டத் தலைவர் பதவியா?

0

'- Advertisement -

 

திருச்சி திமுகவில்  1989ஆம் வருடம்  முதல் கட்சியில்  பொறுப்பேற்ற முக்கிய நபர்கள் தற்போதைய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி,
லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன்,திருச்சி மாநகர மேயர் அன்பழகன், 48வது மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஆகியோர் முக்கியமாவர்களில் சிலர்,

1989 முதல் ஒரே கட்சியில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வரும் பலரும் உயர் பதவியில் உள்ள நிலையில் பொன்மலை பகுதி திமுக செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் தற்போது தான்  முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைகளால் 15.9.2021 அன்று தமிழகத்திலேயே சிறந்த பகுதி செயலாளர் என்ற விருதை பெற்றவர்.

இந்நிலையில் தற்போது திருச்சி மாநகராட்சி கோட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு வரும் 30ம் தேதி தமிழக முதல்வர் வெளியிட உள்ளார்.

இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு முன் மேயர் அறையில் தனியாக அமர்ந்து இருந்த ஸ்ரீரங்கம் 4வது வார்டு கவுன்சிலர் ஆண்டாளின் கணவரும்  ஸ்ரீரங்கம் பகுதி செயலாளருமான ராம்குமாரிடம் மேயர் இல்லாத போது இங்கு யாரும் இருக்கக்கூடாது தயவுசெய்து வெளியில் காத்திருங்கள் என கூறிய மாநகராட்சி ஊழியரிடம் இது திமுக ஆட்சி நீ அமைச்சர் நேருவிடம் சென்று புகார் கூறினால் கூட என்னை ஒன்றும் செய்ய முடியாது.24 மணி நேரமும் நான் இந்த அறையில் தான் இருப்பேன் என தெனாவட்டாக பேசிய ராம்குமாரின் மனைவி கூட ஓர் கோட்ட தலைவராம்.

திருச்சியில் 3 கோட்டத் தலைவர்கள் அமைச்சர் நேருவும் 2 கோட்டத் தலைவர்கள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் பரிந்துரை செய்ய உள்ளனர்.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மதிவாணன் மற்றும் கொட்டப்பட்டு தர்மராஜ் ஆகிய இருவரையும் கோட்ட தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அமைச்சர் கே என் நேருவும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.ஆனால்

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தனது தொகுதியில் இரண்டு கோட்டத் தலைவரும் கள்ளர் சமூகத்தினரா?

Suresh

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்திற்கும், சிறுபான்மையினருக்கும்,வெள்ளார் சமுதாயத்திற்கும் என ஒரு கோட்ட தலைவர் வேண்டும் அது திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் வெற்றி பெற்ற ஒருவரை தான் கண்டிப்பாக கோட்ட தலைவராக நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் நேரடியாக முறையிட்டுள்ளார்.

திருச்சி அமைச்சர்கள் இருவரும் கை கழுவி விட்டதால் இனிகோ இருதயராஜ் நேரடியாக மேலிடத்தில் மோதி இந்தப் பதவியை பெறுவதில் குறிக்கோளாக உள்ளார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் திருச்சி கவுன்சிலர் இதுவரை திமுக உறுப்பினர் அட்டை கூட பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

1989ம் கலைஞர் திருச்சி வந்தபோது திருச்சி மாநகர் முழுவதும்  மாபெரும் வரவேற்பு பேனர்கள் வைத்து திருச்சியில் பிரபலமானவர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ்.

அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிப்பணி, மக்கள் பணியாற்றி வருபவர்.

கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுகவின் ஜ.டி.விங் இவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடிய நபர் என தலைமைக்கு தகவல் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை கட்சிப் பணியாற்றி வரும் கொட்டப்பட்டு தர்மராஜ் அவர்கள்தான் இந்தப் பகுதி கோட்ட தலைவர் ஆகி மக்கள் பணியில் மேலும் தன்னை ஈடுபடுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்த நிலையில்

தற்போது  வெளிநாட்டிலிருந்து வரும் கிறிஸ்தவ டிரஸ்ட் பணத்தை பாதுகாக்க ஒர் இயக்கத்தை தொடங்கி அதனை பாதுகாக்க திமுக உடன் இணைந்து வெற்றிவர்,நாளை இந்த பணத்தை பாதுகாக்க எந்த கட்சியுடன்  ஆளும்  கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயங்காதவர். இவர் எல்லாம்  திமுக தலைவரிடம் பரிந்துரை செய்ததன் பேரில் திருச்சியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் கோட்டத் தலைவர் பதவி என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கவுன்சிலருக்கு தனது வீட்டு வாசலில் நடப்பது கூட தெரியாத நபர். இவர் எப்படி தனது வார்டில் பணியாற்றுவார் என அப்பகுதி பொது மக்களே எதிர்பார்க்கும் நிலையில், கோட்டத் தலைவர் கூட்டத்தை இவர் எப்படி நடத்துவார் என அப்பகுதி கவுன்சிலர்களே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கவுன்சிலர் தர்மராஜ் அவர்களிடம் கேட்டபோது எனது பணி மக்கள் பணி செய்வதே தலைமை எடுக்கும் என்பது முடிவுக்கும் கட்டுப்படுவேன் என தெரிவித்தார்…..

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கூறும்போது மற்ற கட்சியினர் போல் இல்லாமல் திமுகவைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டும் தான் பதவி என கூறியது பொய்த்து விடுமா என்பதே பொதுமக்களின் கேள்வி ?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.