தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களை கண்டித்து வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் கண்டோன்மெண்ட் புறநகர் கிளை வாயில் முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொ.மு.ச மத்திய சங்க தலைவர் பழனிச்சாமி. பொருளாளர் அப்பாவு, சிஐடியு. பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, ரெங்கராஜ், ஏஐடியுசி, பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணியன், சுரேஷ், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் துரைராஜ், எஸ் எம் எஸ். பொதுச் செயலாளர் செல்வம், டிடிஎஸ் எப். பொதுச் செயலாளர் பெருமாள், ஏ.ஏஎல்.எல்.எப். மத்திய சங்க தலைவர் வையாபுரி, எம்எல்எப். பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து போக்குவரத்து சங்க தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.