Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கத்திமுனையில் காவலாளியிடம் பணம் பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

0

திருச்சி பால் பண்ணையில்
தனியார் நிறுவன காவலாளியிடம் பணம், செல்போன், வாகனம் கத்திமுனையில் பறித்த
2 கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி சர்க்கார்பாளையம் வளநகர் கீழாநெல்லி குடியைச் சேர்ந்தவர் இயேசுதாஸ் (வயது 69). இவர் திருச்சி-தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கார் நிறுவனத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்திமுனையில் இவரை மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு
போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.