நுழைவு வரி வசூல் செய்ய ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகமும் ஆட்சேபனை. மநீமய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி வழக்கறிஞர் கிஷோர் குமார்.
மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் பணிக்கு கிடைத்த முதல் வெற்றி. வழக்கறிஞர் கிஷோர் குமார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது கடந்த 3-ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது இதனை மீண்டும் தொடங்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து திருச்சி தென் மேற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மாவட்ட செயலாளர் வக்கீல்.எஸ்.ஆர்.கிஷோர்குமார் தலைமையில் மனுகொடுக்கப்பட்டது.
உடன் மாவட்ட துணைசெயலாளர் பாலசுப்ரமணியன், மய்ய நிர்வாகி ஆட்டோ பாஸ்கர், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகளும் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் கோவில் இணை ஆணையர்/செயல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர்,மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கான காரணங்களையும் விவரித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.இன் மக்கள் நீதி மய்ய கட்சியின் மக்கள் பணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும் என
வக்கீல்.S.R.கிஷோர்குமார்,
(மாவட்ட செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தென் மேற்கு மாவட்டம்.
செல்: 98659 62927.) கூறியுள்ளார்.