Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார்.

வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் மயில் வாசித்தார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு – செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 22-ந் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக பங்கேற்பது.

மார்ச் 28, 29ம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,

உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாவட்ட மாறுதல் விரைந்து நடத்தப்பட வேண்டும், ஆசிரியர்களை இணையத்தில் நாள்தோறும் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள கூறுவதையும், தேவையற்ற பயிற்சிகள் அளிப்பதையும் பள்ளி கல்வித்துறை நிறுத்தவேண்டும்.

வகுப்பறையில் மாணவர்களுக்கு முழுமையான கற்பித்தல் பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.

முடிவில் துணை பொது செயலாளர் கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.