திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் பிணம்,
போலீஸார் விசாரணை.
திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
தங்கியிருந்தும் மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இ.வார்டு லிப்ட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் சித்ரா அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார் ?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.