Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை முன்னேற்ற இயக்கம் தொடக்க விழா.

0

தமிழ் சுவிஷேச லுத்ரன் திருச்சபை முன்னேற்ற இயக்க (எல்.பி.எம்.) தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி ராணா மகாலில் நடந்தது.

கூட்டத்தில் புதிய தலைவராக சார்லஸ் ஐசக்ராஜ், பொதுச்செயலாளராக கிரேனேப்பு கலாராணி, பொருளாளராக இஸ்ரவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படனர்.

கூட்டத்தில், நிர்வாகிகள், ஆயர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் திருச்சபையின் வளர்ச்சிகாக பல்வேறு திட்டங்களை உருவாக்குவது எனவும், கல்வி நிறுவனங்கள், விடுதிக்கழகம், மருத்துவ கழகம் போன்ற திருச்சபையில் பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து துறைகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்வது எனவும், ஆயர்களுக்கென தனி நலவாரியம் அமைத்து மருத்துவ காப்பீடு, கல்வி உதவி போன்ற திட்டங்களை உருவாக்கி ஆயர்களை ஊக்குவிப்பது என்றும், அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை கல்வி நிறுவனங்களில் அரசு அனுமதி பெற்று ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டு வருவதுக், கல்வி நிறுவனங்கள், விடுதி கழகம், மருத்துவ கழகம் லுத்ரன் திருச்சபை முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட 30 அம்ச தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.