
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதில் திருச்சி மாநகராட்சி கீழப்புதூர், மணல்வாரி துறைரோடு, துரைசாமிபுரம், பாரதி நகர் காஜாபேட்டை உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய
ஆகிய 34வது வார்டில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக போட்டியிட இன்று அரியமங்கலம் தேர்தல் அதிகாரி கமலகண்ணனிடம் மனு தாக்கல் செய்தார்.
இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி துணை மேயராகவும், அரியமங்கலம் கோட்ட தலைவராகவும் சிறப்பாக மக்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.