Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பொங்கல் தொகுப்பினை அமைச்சர்கள் கே.என்.நேரு மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

0

திருச்சியில் 21 பொருட்கள் அடங்கிய
பொங்கல் தொகுப்பு.

அமைச்சர்கள் கே.என்.நேரு,
மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள்,கரும்பு, துணிப்பை உள்பட மொத்தம் 21 பொருட்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்கினர்.

இந்தநிலையில் இன்று தலைமைச் செயலகத்தில்
பொங்கல் தொகுப்புகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். ஜனவரி 10-ம் தேதி வரை டோக்கன் வாரியாக பொங்கல் பரிசு விநியோகிக்கப்படுகிறது. அன்றைய தினத்துக்குள் பெற முடியாதவர்கள் பண்டிகை முடிந்த பிறகு கூட வாங்கிக்கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து இன்று திருச்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை அமைச்சர் கே.என். நேரு பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்,மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, மோகன்தாஸ் , முன்னாள் கோட்ட தலைவர் பாலமுருகன், மார்சிங் பேட்டை செல்வராஜ், என்ஜினீயர் நித்யானந்தம், துர்கா தேவி காங்கிரஸ் மகளிரணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை பொத்தமேட்டுபட்டி யில் உள்ள நியாய விலை கடை, திருச்சி மன்னார்புரம் பகுதி கல்லுக்குழியிலுள்ள நியாய விலை கடை, திருவெறும்பூர் டவுன்ஷிப் சி செக்டர் பகுதியிலுள்ள நியாய விலை கடை ஆகிய கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கலெக்டர் சிவராசு, திருச்சிராப்பள்ளி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன்,பொது வினியோக திட்டம் பத்மகுமார், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அபிபுல்லா, கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ஜீசஸ் விக்டர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.