Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கொரானா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

0

 

திருச்சி மாவட்டத்தில்
கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 31 தேதி 8 ஆக இருந்த பாதிப்பு நேற்று முன்தினம் 51 ஆக உயர்ந்து நேற்று 123 ஆக உயர்ந்தது. இந்த திடீர் உயர்வு சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கூறியதாவது ;-

திருச்சி மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 3500 படுக்கை வசதிகள் உள்ளன.

கடந்த காலங்களைப் போல பிஷப் ஹீபர் கல்லூரி, காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளன .

மேலும் வட்டார வாரியாகவும் கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நோய் அறிகுறி இல்லாத இணை நோய்கள் இல்லாதவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் இருப்பு தேவையான அளவு இருக்கிறது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம், கிருமிநாசினி போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால் அந்த பகுத தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.