Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செல்போனில் இளம் பெண்ணை பேசி ஏமாற்றிய திருச்சி வாலிபர் கைது.

0

 

நண்பனுக்கு நிச்சயித்த பெண்ணை செல்போனில் பேசி ஏமாற்றிய வாலிபர்.

திருச்சி காஜா நகர் அப்துல் கபூர் தெருபகுதியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 31) திருச்சி காஜா நகர் கிரசன்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன். (வயது 25 )இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது நூர் முகம்மதுவின் செல்போன் ,ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை ஜலாலுதீன் அவ்வப்போது பயன்படுத்தி வந்தார்.

இவர் சென்னையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நூர் முகமது ஆன்லைன் மூலம் ஆடர் செய்யும் பொருட்கள் சென்னையில் உள்ள தனது நண்பர் ஜலாலுதீன் முகவரிக்கு சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார் .

நூறு முகமதுவின் போனை அவர் தவறாக பயன்படுத்தி இவ்வாறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை அடுத்து நூர் முகமது நண்பனை கண்டித்தார். பின்னர் இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் 2020 டிசம்பர் மாதத்தில் நூர் முகம்மதுவுக்கும் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ஹரசியா மீரா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது .பின்னர் 2021 மார்ச் 21ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது .

திருமணம் முடிந்து இரவு புதுமணத் தம்பதியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மீரா திருமணத்திற்கு முன்பாக கணவர் பெயரில் தனக்கு வந்த புத்தகம் தொடர்பாக பேசினார். அதுமட்டுமல்லாமல் உங்களிடம் செல்போனில் பேசியது நினைவில் இல்லையா என கேட்டார். இதைக்கேட்டதும் நூறு முகமதுவுக்கு தலைசுற்றியது.

தான் புத்தகம் மற்றும் செல்போன் நம்பரை அனுப்பவில்லை எனக் கூறினார் .

இதையடுத்து புதுமண தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணம் முடிந்த மறுநாள் நூர் முகமது அந்த புதுப்பெண்ணை விவாகரத்து செய்து விட்டு இருவரும் பிரிந்து சென்றனர். பின்னர் நூறு முகமது திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன்விரோதம் காரணமாக நண்பனை பழி வாங்கும் நோக்கத்தில் நூர் முகம்மதுவுக்கு நிச்சயமான பெண்ணுக்கு ஜலாலுதீன் தஞ்சாவூர் அபிராமி பட்டணத்தில் ஒரு பெண்ணின் ஆதார் கார்டை கொடுத்து ஏர்டெல் சிம் ஒன்று வாங்கியுள்ளார். அதனை தன்வசம் வைத்துக்கொண்டு ட்ரூகாலர்ல் நூர் முகமது பெயர் வருமாறு பதிவு செய்தார் .பின்னர் நண்பனுக்கு நிச்சயம் செய்த மீராவுக்கு கூரியர் மூலம் ஒரு புத்தகத்தை பரிசாக அனுப்பி அதில் அந்த செல்போன் நம்பரையும் அனுப்பியிருந்தார் .

மீரா கணவர் செல்போன் நம்பர் என நினைத்து ஜலாலுதீன் இடம் திருமணத்திற்கு முன்பு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து நண்பனை ஏமாற்றி திருமண வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்ட ஜலாலுதீன் மற்றும் சிம் கார்டு வாங்க உதவிய புதுக்கோட்டை அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது (வயது 26) ஆகிய 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.