திருச்சியை சேர்ந்த ராகுல் -மகாலட்சுமி. இவர்களுடைய மகன் சச்சின். இவர் காமகோடி வித்யாலயா பள்ளி படித்து வருகிறார்.
இவர் கராத்தே கிராண்ட் மாஸ்டர் ஜெட்லியிடம் பயிற்சி பெற்று கராத்தே பயிற்சியில் மஞ்சள் பெல்ட் பெற்றவர். மாரத்தான் ஓட்டத்திலும் பரிசு சான்றிதழ்கள் பல பெற்றுள்ளார்.
இந்தியாவின் 73 வது குடியரசு தினத்தையொட்டி 7.5 கிலோ எடையுள்ள 15 கான்கிரீட் கற்களை வலது கால் பாதத்தில் 30 விநாடிகளில் உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவனுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வழக்கறிஞர் சற்குருநாதன் சான்றிதழ் மற்றும் பழக்கம் வழங்கி பாராட்டினர்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ், பதக்கம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கின்னஸ் உலக சாதனையாளர்கள் டாக்டர் அருண் சுந்தர், செந்தில்குமார், ஜெட்டிஸ் சோனி, கோகுல், சாய்னா ஜெட்லி, சகிதா, ரேஷ்மி, பக்கிரிசாமி, சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்கள், டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றம் வெண்பா, அனிதா, ரோஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.