திருச்சியில் மாயமான இளம்பெண்ணுக்கு திருமணம்.
திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார் .
இரு தினங்களுக்கு முன்பு பேக்கரிக்கு வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே காளீஸ்வரி ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல்லில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதுபற்றி கண்டோன்மெண்ட் சப் இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.