அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தினத்தை முன்னிட்டு லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருவுருவ சிலை மற்றும் அவரது திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தி,
அதிமுக கொடியேற்றி, அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் லால்குடி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சூப்பர் டி.என்.டி.நடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.எம்.பாலன், மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, அன்பில் தர்மதுரை
மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மற்றொரு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ப.குமார் அறிவுறுத்தலின்படி திருச்சி பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் கொல்லப்பட்டி தேர்தல் உன்னை அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மேலும் அப்பகுதியில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.