எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா. சோமரசம்பேட்டையில் மா.செ.பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான கொண்டாட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டையில் நடைப்பெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சேவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கொண்டனர்.