
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட சார்பாக முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளரும், மாநகர் மாவட்ட செயலாளருமான மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், கலைச்செல்வன், அமைப்புச்செயலாளர் சாருபாலா தொண்டைமான், ராசமாணிக்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில பாசறை செயலாளர் செந்தில் பஞ்சநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தினேஷ்பாபு, ராமனாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எனர்ஜி அப்துல் ரகுமான். மகளிர் அணி, ராஜலெட்சுமி ராதாகிருஷ்ணன், பெஸ்ட் பாபு,பகுதி செயலாளர்கள் தன்சிங், சங்கர், கல்நாயக் சதீஷ்குமார், வேதாத்ரி நகர் பாலு, கமுருதீன், மனோஜ்குமார், வெங்கடேசன், ஸ்ரீபிரியை. ஒததக்கடை செந்தில், உமாபதி, வக்கீல் சரவணன், ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கதிரவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.