தமிழ் திரை உலகில் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் முடிந்து 18 ஆன நிலையில் தெரிவதாக தகவல் வெளியாயின.
இதை உறுதிப்படுத்துவதாக தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானவர்.

இவர் 22 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து கரம் கரம்பிடித்தார்.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி திருமணம் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடிக்கு, யாத்ரா – லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தனுஷ் பல உயரங்களை தொட்டார். கோலிவுட்டின் கவனிக்கத்தக்க ஜோடிகளில், தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியும் ஒன்று. ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனுஷின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இருவரும் விவாகரத்து அறிவித்திருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை உண்டாகி இருக்கிறது.