Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்.

0

தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து பி.இ, கலை-அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.