திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளராக எனர்ஜி ஐ.அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னை மாநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்த கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கும்,
பரிந்துரை செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளரும் மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன் அவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்து உள்ளார்.
இவரது பணி சிறக்க திருச்சி மாநகர் முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.