Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராஜேந்திரபாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ கைது.

0

'- Advertisement -

 

Ad banner

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை தனிப்படை போலீசார் நேற்று தமிழ்நாடு அழைத்து வந்தனர். பின்னர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்பின்னர், ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு விருதுநகர் கலெட்கர் அலுவலகம் முன் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் அதிமுக கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதைனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் அதிமுக நிர்வாகிகளை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.