திருச்சி ஐசிஎப் பேராலயம் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி ஐ.சி.எப்.பேராயம் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உலக அமைதிக்காகவும், இந்தியாவில் பயங்கரவாதம் இல்லாமல் இருக்கவும், தமிழகத்தில் மத அமைதியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும்,
பாரதப்பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நீண்ட ஆயுளுடன் சேவை செய்யவும் மற்றும் மக்கள் புதிய ஆண்டில் செழிப்புடன் நோயின்றி வாழவும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஜெனிட்டா ஜான்சன், சகாயராஜ், டோமினிக், ஜெயராஜ், மனோகரி ஆகியோர் கலந்து கொண்டனர்.