Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோயில் புனரமைப்பு பணியால் லாபமில்லை. மலைக்கோட்டை இ.ஒ. விஜயராணி தெனாவட்டு பேச்சு.

0

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலின் உப கோவிலான

3000 ஆண்டுகள் , பழமைவாய்ந்த அருள்மிகு சப்த கன்னிமார் கோயில் என்று அழைக்கப்பட்ட தற்சமயம் நயினார்கோவில் என்னும்

அருள்மிகு அய்யனார் கோவில் நிலைமைதான் இது ,

1996ல் அப்போதைய EO ஆக இருந்த முருகேசன் அவர்களாலும், பொதுமக்களாலும் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது ,

அதற்கு பின்பு இரண்டு முறை கும்பாபிஷேகம் நடந்து இருந்திருக்க வேண்டும் , ஆனால் இந்து சமய அறநிலையத் துறையின் மெத்தனப் போக்கால் கும்பாபிஷேகங்கள் நடைபெறவில்லை,

இத்திருக்கோவில் முழுமையாக சிதலமடைந்து இருக்கிறது.

4 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் இத்திருக்கோவிலின் சுற்றுச்சுவர் மற்றும் சுவாமிக்கு உணவு சமைக்கும் அறையும் இடிந்து விழுந்துவிட்டது ,

அதுமட்டுமில்லாமல் அர்த்த மண்டபமும் அதை தாங்கி நிற்கும் தூண்களும் எப்போது விழம் என்ற நிலையில் தான் உள்ளது,

இதைப்பற்றி அப்பகுதியில் உள்ள மக்கள் மலைக்கோட்டை இணை ஆணையர் விஜயராணி அவர்களிடம் தெரிவித்தபோது

இந்தக் கோயிலால் எந்த வருமானமும் எங்களுக்கு கிடையாது ஆகையால் நீங்களே கல்லையும் மண்ணையும் அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள் என்று

தனக்கும் இத்திருக்கோயிலுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல் கூறிஉள்ளார் ,

இதை அறிந்த ஹிந்து அமைப்பினர் அவர்களது அலுவலகத்தை முற்றுகை இட்டததால், தற்சமயம் இடிந்து விழுந்த பகுதியை அப்புறப்படுத்தி வருகிறார்கள் ,

ஆனால் பொதுமக்களோ இதை அப்புறப்படுத்தினால் மட்டும் போதாது உடனடியாக இக்கோவிலை முழுமையாக புனரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் அப்பொழுது தான் இடிந்துவிழும் நிலையில் இருக்கும் இத் திருக்கோவிலில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகிறார்கள் ,

காரணம் அனேக குடும்பங்களுக்கு இங்கு வீற்றிற்கும் சுவாமி குலதெய்வமாக உள்ளார் என்றும் அதனால் அடிக்கடி காது குத்துவதும் பூஜை முறையும் நடைபெறும் என்று கூறுகிறார்கள்.

இதன் சம்பந்தமாக பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அமைச்சர் , மற்றும் அதிகாரிகளுக்கு, கோரிக்கை மனு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சென்னையில் மழையில் விழுந்த மசூதியை உதயநிதியும் தயாநிதியும் ஓடோடிச் சென்று பார்த்தது போல் இத்திருக்கோவிலையும் அதிகாரிகள் ஓடோடி வந்து பார்ப்பார்களா என்பது இப்பகுதி மக்களின் கேள்வி ஆக உள்ளது.

குறிப்பு: மலைக்கோட்டை கோயில் இணை ஆணையர் விஜயராணி திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக வீடு ஒன்றைக் கட்டி வருவதாக தகவல்.

Leave A Reply

Your email address will not be published.