வக்பு சொத்துக்களை முறையாக பாதுகாக்க வேண்டும் : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை .
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .

தமிழகம் முழுவதும் வக்பு வாரிய சொத்துக்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் வக்பு சொத்துக்களை சட்ட விரோதமாக ஆக்கிரமைப்பு செய்து உள்ளனர். ஆகவே வக்பு சொத்துக்களை சட்ட விரோதமாக ஆக்கிரமைப்பு செய்தவர்களிடம் இருந்து வக்பு சொத்துக்களை உடனடியாக மீட்க வேண்டும் மேலும் ஆக்கிரமைப்பு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் எந்த வித பயன் பாட்டிற்கும் இல்லாமல் படந்து விரிந்து கிடக்கின்றன. இதனை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் வக்பு சொத்துக்களை ஆக்கிரமைப்பு செய்து உள்ளனர் ? ஆகவே வக்பு சொத்துக்கள் இருக்கும் இடத்தில் மக்களுக்கு தெரியும் வகையில் கம்பி வேலிகள் அல்லது பெயர் பலகைகள் அமைக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .
எனவே தமிழகம் முழுவதும் உள்ள வக்பு சொத்துக்களை முறையாக ஆய்வு செய்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம் . மேலும் ஆக்கிரமைப்பு செய்ய பட்ட வக்பு சொத்துக்களை மீட்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக ஜனநாயக ரீதியாகவும் , சட்ட ரீதியாகவும் போராடி களம் கான படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.