Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நகை கடன் தள்ளுபடி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அமைச்சர் ஐ.பெரியசாமி.

0

 

தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு,

அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

நகைக்கடன் தள்ளுபடியில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தம் 10.18 லட்ச நகைக்கடன்களே (50 சதவீதம்) தள்ளுபடிக்கு தகுதியானவை. மேலும், 48.84 லட்ச நகைக்கடன்களில், 7.65 லட்ச கடன்கள் 40 கிராமிற்கு மேலானவை ஆகும்.

21.63 லட்ச நகைக்கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்களால் 40 கிராமிற்கு மேல் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.20 லட்ச கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன.

இதன் மூலம், 15.2 லட்ச கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளன.

22 லட்சத்து 52 ஆயிரத்து 226 கடன்தாரர்களில் தற்போது 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பேரின் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.