Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால்

0

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் !

குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் நெஞ்சு சளி பிரச்சனையை அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். முதலில் அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து பிறகு சளியை வெளியேற்ற வேண்டும்.

பூண்டு பால் செய்ய தேவையான பொருட்கள்: பசும்பால் 200 மில்லி, தண்ணீர் அரை டம்ளர், பூண்டு பல் 7, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகு தூள் கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு தேவையான அளவு.

முதலில் பாலில் தண்ணீரை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு பூண்டு பல்லை தோலுரித்து பாலில் போட்டு வேகவிடவும். பூண்டு பற்கள் வெந்த பிறகு அதனை இறக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.

தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த பூண்டு பாலை குடித்து வரவேண்டும். இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து பாலை குடிக்க வேண்டும். பால் குடித்த பிறகு வேறு எதையும் சாப்பிட கூடாது.

இந்த பூண்டு பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பூண்டின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கக்கூடாது. இந்த பூண்டு பாலை தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சு சளியை அகற்றி சளியை முழுவதுமாக வெளியேற்றும்.

Leave A Reply

Your email address will not be published.