திருச்சி பொன்மலை பட்டியில்
இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு சாவு,
மற்றொரு சம்பவத்தில் பெண் ஊழியர் தற்கொலை .
திருச்சி பொன்மலைப்பட்டி காந்தி தெருவை சேர்ந்தவர் ஜான் விஜய் வசந்த். இவரது மனைவி சியாமளா என்கிற சாரா (வயது 44). இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.குடும்ப பிரச்சனை சம்பந்தமாக சியாமளா சற்று மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

2.பெண் ஊழியர் தற்கொலை .
திருச்சி மேலசிந்தாமணி நடு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தாமரை வள்ளி. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் படிக்கட்டில் அவர் தவறி விழுந்து காயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.