தமிழகத்தில் 6 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்? திருச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் புற்றுநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.பின்னர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார், பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நைஜிரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் S-ஜீன் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
அதனால் அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்களின் பரிசோனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும்.
அரசு மருத்துவமமைகளில் அனுமதிக்கப்படும் 50 வயது மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட உள்ளது.அதற்கான வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அதனை தொடங்கி உள்ளோம் என கூறினார்.
இந்தப் பேட்டியின் போது அருகில் அமைச்சர் கே.என். நேரு,மகேஷ் பொய்யாமொழி,சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,
சௌந்தரராஜன், ஸ்டாலின் குமார்திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
அரசு மருத்துவமனை டீன் வனிதாமற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.