மதுரம் அறக்கட்டளையின் மக்கள் மறுவாழ்வு திட்டம் 3 ஆம் ஆண்டு தொடக்கவிழா திருச்சியில் நடைபெற்றது.
மக்கள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவை என கடந்த 140 வருட பாரம்பரியம்மிக்க வரலாற்று பெருமையை மதுரம் மருத்துவமனை பெற்றுள்ளது. உலக பிரசத்திபெற்ற மதுரம்ஸ் குரு தைலம் இதன் மகுடம் ஆகும்.
திருச்சி நகரசபையின் முதல் சேர்மன் மற்றும் 1954ல் திருச்சியின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை டாக்டர் மதுரம் அவர்கள் பற்றிய கல்வெட்டுகள் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது.
திருச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பல பள்ளிகள், இடங்கள் அவர்கள் தானமாக கொடுத்தது என்பது வரலாற்று உண்மை.
அந்த தலைமுறையின் அடிச்சுவட்டின் அடையாளமாக டாக்டர் சாமுவேல் எ. மதுரம் அவர்களின் ஒரே மகன் டாக்டர் ஐவன் மதுரம் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் ஷர்மிலி மதுரம் அவர்களின் அயராத முயற்சியால் மதுரம் சுகாதாரம், கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை 2017ல் தொடங்கப்பட்டு இன்றுவரை சுயதொழில் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் உயிரோட்டமாக செய்யப்பட்டு வருகிறது.
கோவிட்-19 தொற்று ஊரடங்கு காலத்தில் பல மாவட்ட மக்களுக்கு மத இன வேறுபாடின்றி 60 கிராமங்களுக்கு நேரில் சென்று சுமார் 6000 மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன் சுமார் 300 குடும்பங்களுக்கு சுயதொழில் மூலதனப் பொருட்கள் வழங்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது .
மேற்படி மதுரம் மருத்துவமனையின் ஒரு அங்கமாக மதுரம் சுகாதாரம் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா முப்பெரும் விழாவாக நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவியுடன் இன்று திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் நடைபெற்றது .
சுமார் 250 பேர்கள் கலந்து கொண்ட இவ்விழாவின் தலைமை மற்றும் ஏற்பாடுகளை மதுரம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், நிர்வாக அறங்காவலராக பதவி வகிக்கும் டாக்டர் ஐவன் மதுரம் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.
மேற்படி விழாவில் டாக்டர் ஷர்மிலி மதுரம், மருத்துவ கண்காணிப்பாளர் மதுரம் மருத்துவமனை ராஜன், மாநில அமைப்பாளர், அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் மற்றும் ஜான்சன் மாணிக்க ராஜன் (ஓய்வு BSNL) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருத்தினர் வக்கீல் முத்துசாமி தலைவர் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சிறப்புரையாற்றினார்.
பீஸ் ஜஸ்டிஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் ஆர்.பதுவா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சர்க்கிள் லெக்க்ஷ்மி, பாரதிதாசன் யூனிவர்சிட்டி விரிவுரையாளர் டாக்டர் முருகேஸ்வரி,
கன்மலை டிரஸ்ட் நிறுவனர் சகோ கன்மலை எடிசன்,IGNM டிரஸ்ட் ரெவரென்ட் பிரசாத் தேவசித்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேற்படி விழாவில் சுமார் 100 பேர்களுக்கு சுயதொழில் மூலதனப்பொருள்கள், தையல் இயந்திரம், வெட்கிரைண்டர் மற்றும் பள்ளி, கல்லூரி கல்வி உதவி காசோலைகள் வழங்கப்பட்டது.
மேற்படி விழாவின் நோக்கம் பற்றி டாக்டர் ஐவன் மதுரம் அவர்கள் கூறுகையில்,
வறுமை காரணமாக குற்றங்கள் பெருகி வருகிறது.வன்முறையற்ற சமுதாயம்! வளமான மக்கள் வாழ்வு! தேசிய ஒருமைப்பாடு! நிலைநிற்கவே இப்படிப்பட்ட மறுவாழ்வு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.பல்துறை மருத்துவமனையாக அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த மருத்துவம், இயற்கையான சுகப்பிரசவம் என தரம் உயர்த்தப்பட்டு தனிக்கவனத்துடன் பராமரிக்கப்பட்டு மதுரம் மருத்துவமனை மக்கள் ஆதரவுடன் சிறந்து விளங்குகிறது எனக் கூறினார்