Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவேரி ஆற்றில் மாநகராட்சி குப்பைகள். செயல்படாத ஆணையரே காரணம்.வையாபுரி குற்றச்சாட்டு.

காவேரி ஆற்றில் மாநகராட்சி குப்பைகள். செயல்படாத ஆணையரே காரணம்.வையாபுரி குற்றச்சாட்டு.

0

திருச்சி காவிரி ஆற்றில் மாநகராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது இதுகுறித்து, வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

திருச்சி மாநகராட்சியின் அலட்சியம்.
காவிரி ஆற்றில் மாசு
கலப்படம்.
ஆணையரின் அலட்சியப்போக்கு.

திருச்சி மாநகராட்சி, ஊழல் ஆணையர் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சி வளர்ச்சிக்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பல இடங்களில் குப்பை மிகப்பெரிய மேடாக காட்சியளிக்கிறது.

மாநகராட்சி பகுதியில் ஓடுகின்ற ஆறுகளில் மாநகராட்சி குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

அதேபோல் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய நதி காவிரி ஆற்றில் மாநகராட்சி குப்பை கூளங்களை காவிரியாற்றில் தொடர்ந்து கொட்டி வருகிறது.

புனித காவிரி நீரில் மாநகராட்சி குப்பை கூளங்கள் கொட்டுவதால் ஆற்றின் புனிதத்தன்மை கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் புனித நீரில் மாசு / கலப்படம் ஏற்படுகிறது.

மேலும் மாநகராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பைகளில் பாலிதீன் கவர்கள் அந்த புனித நீரில் கலக்கிறது. ஆடு, மாடுகள் அந்த நீரை அருந்தும் போது நீரில் அடித்து வரப்பட்ட பாலிதீன் கவர்கள் மூலம் ஆடு, மாடுகளின் வயிற்றில் சென்று அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு இறப்பு கூட நடைபெறுகிறது.

மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காவிரி ஆற்றின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது காவிரி ஆற்றின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகள் காவிரி ஆற்றின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மாநகராட்சி சார்பில் ஆற்றில் கலக்கும் குப்பைகளால் மாசு கலந்த நீரை மக்கள் அருந்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் திருச்சியின் மையப்பகுதியில் ஓடுகின்ற உய்யகொண்டான் ஆற்றிலும் மாநகராட்சி குப்பை கூளங்கள் தொடர்ந்து கொட்டப்படும் அவலநிலை தற்போது வரை உள்ளது.

உய்யகொண்டான் ஆற்றுநீர் பாசனத்திற்காக செல்லக்கூடியது. இந்த நீரில் மாநகராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பை கூளங்கள் அந்த நீரும் மாசு கலப்படம் ஏற்பட்டுள்ளது.

புனித காவிரி ஆற்றில் மாசு கலப்பதற்கு மாநகராட்சியின் அலட்சியப் போக்கே காரணம் அதேபோல் பாசன வாய்க்கால் உய்யக்கொண்டான் வாய்க்கால் ஓடுகின்ற நீரிலும் பெருமளவு மாசு கலந்த தண்ணீராக செல்கிறது.

ஆறுகளில் மாசு கலப்படம் நீர் உருவாவதற்கு மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். மாநகராட்சி ஆணையராக பொறுப்பில் இருக்கும் ஊழல் நாயகன் இதைப்பற்றி எல்லாம் கவனிக்காமல் இருப்பது மாநகர மக்களின் வேதனை குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் திருச்சியில் ஓடுகின்ற ஆறுகளில் சாக்கடை நீர் தான் செல்லக் கூடிய நிலை ஏற்படும்.

தமிழக அரசு இது குறித்து தனி கவனம் செலுத்தி ஆறுகளில் மாநகராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை கொட்டாமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு காரணமான மாநகராட்சி ஆணையர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புனித காவிரி ஆற்றில் சாக்கடை நீர் மட்டும்தான் செல்லும் நிலை ஏற்படும்.

அலட்சியப் போக்குடன் நிர்வாகத்தை நடத்தும் ஆணையர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என
சுதேசி வேளாளர் பேரவை.
“தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன், நிறுவனர் ஏ.வையாபுரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்..
(செல் நம்பர்:
95002 99882)

Leave A Reply

Your email address will not be published.