திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்.
திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்.
வருடந்தோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களில் சிலர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாலை அணிந்து செல்ல யோசிக்கும் வேளையில்
இன்று திருச்சி குழுமணி அருகே உள்ள அயிலாபேட்டையை செர்ந்த ஐயப்ப பக்தர்கள் 8 பேர் கொரோனா வைரஸ் காரணமாக
சமுக இடைவெளியுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று தங்களது 4 இருசக்கர வாகனங்கள் மூலம் தலையில் இருமுடி சுமந்து (முக கவசம் அணிந்து) கொண்டு சபரிமலை சென்றனர்.
(காற்றடிக்கும் பம்ப் ஒன்றையும் எடுத்து சென்றனர்)
ஐயப்ப பக்தர்களின் இந்த புதிய முயற்சியை மக்கள் பலரும் பாராட்டி சென்றனர்.