Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை.

உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை.

0

 

ஜீயபுரம் பேருந்து நிறுத்ததில் சாலை பாதுகாப்பை உறுதி படுத்த கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.

புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதி மூன்று சாலைகள் இணைப்பு சாலையாகவும் ,

இப்பகுதியில் பல்துறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ரயில் நிலையங்கள், நிறைந்த பகுதியும்,

தினந்தோறும் இருப்பத்தி ஜந்து க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள முக்கிய பகுதியாகும்.

அகலம் குறைவான இப்பகுதியில் கரூர் சாலையில் நடுவில் சென்டர்மீடியனும் குழுமணி பிரிவு சாலையில் சென்டர் மீடியனும் அமைக்கபட்டள்ளது.

குழுமணி பிரிவு சாலையில் வாகனங்கள் திரும்பும் போது கரூர் சாலையில் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் சென்டர்மீடியன் பகுதியில் இரண்டு புறமும் பேருந்து நிறுத்தம் உள்ள படியால் பேருந்துகள் நின்று செல்லும் போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்

இச் சாலையில் செல்லும் வாகனங்கள் எதிர் எதிர் திசையில் விதிகளை மீறிச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இச் சாலையில் சென்டர்மீடியன் இரு புறமும் வாகனங்களும் ,
பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் நின்றுள்ளபடியாலும்,

இச்சாலையில் சென்டர் மீடியன் ஒரு புறம் வணிக வளாகங்கள் உள்ளபடியால் அதற்க்கு வரும் பொதுமக்களும் அவரவர் வாகனங்களை நிறுத்துவது பெரும் போக்குவரத்து நெரிசலை உண்டு பன்னுகிறது.

இப்பகுதியில்
அதி வேகமாக வரும் வாகனங்களால் சென்டர் மீடியன் கட்டையில் வாகனங்கள் இடித்து விபத்து ஏற்படுவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்துக் காவலரை பணியில் நியமித்தும், பல மாதங்களாக காலியாக உள்ள ஜீயபுரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பணி இடத்தை நியமிப்பதும் பொது மக்களின் நலன் காக்க வேண்டுகிறோம்.

தாங்கள் எங்களுடைய மனுவினை பரிசீலனை செய்து தக்க அலுவலரை நியமித்து

இப்பகுதியில் கள ஆய்வும், துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை செய்தும்

இப்பகுதியில் சாலை கட்டமைப்புகளை நிறுவி ஜீயபுரம் பேருந்து நிறுத்தம் சென்டர் மீடியன் பகுதியில் சாலை பாதுகாப்பையும் உயிர் பாதுகாப்பையும், உறுதி படுத்த வேண்டுகிறோம்

Leave A Reply

Your email address will not be published.