நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பூமிநாதன் உதவி ஆய்வாளர் அவர்கள் பணியில் இருந்த போது ஒரு கும்பல் ஆடு திருடி கொண்டு போவதை அறிந்து அவர் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க தனது வாகனத்தில் விரட்டி சென்று களமாவூர் மூகாம்பிகை கல்லூரி அருகில் செல்லும்போது அந்த ஆடு திருடும் கும்பலின் கொலைவெறி தாக்குதலில் அவர் வீர மரணம் அடைந்திருக்கிறார்.
அவருக்கு திருச்சி மாநகர் மாவட்ட மக்கள் சார்பிலும், அனைத்து சமூக ஆர்வலர்கள் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவிக்கிறோம்.
தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் பணியாற்றி தனது இன்னுயிரை எதிரிகளோடு போராடி வீரமரணம் அடைந்து இருக்கிறார் பூமிநாதன்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் குறிப்பாக காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அவரோடு பழகியவர்கள் அனைவரும் மிகவும் வேதனை அடைய கூடிய ஒரு சிறப்பாகவும், நேர்மையாகவும் கடமையனவர் பூமிநாதன்.
அதே காவல் நிலையத்தில் அவருடைய ரங்கிலே சில கருப்பு ஆடுகள் இருக்கிறது, அவர்களுக்கெல்லாம் வாய்ப்பில்லாமல் இவர் வீர மரணம் அடைந்திருக்கிறார்.
எனவே காவல்துறையில் நேர்மையாக கண்ணியமாக உண்மையாக கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து நேர்மையாக பணியாற்றிய ஒரு காவல் அதிகாரி வீரமரணம் அடைந்து இருக்கிறார் என்பது அவர் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார் .
துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினர் உயர் அதிகாரிகள், அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏதோ கைது செய்தோம் என்பதோடு இல்லாமல் அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்திய தண்டனை சட்டத்தின் படி உரிய தண்டனை வழங்கினால் நீதி கிடைக்கும்.
காவல் அதிகாரிகள் அனைவருக்கும் காவல்துறையினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையின் மீது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
இறந்த பூமிநாதனின் குடும்பத்தாருக்கு உடனடியாக ஒரு கோடி ரூபாய் அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தனது கூறியுள்ளார்.