திருக்கோவில் செயல் அலுவலர் அய்யம்மாலால் ஏற்பட்ட நஷ்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும், வையாபுரி.
ஊழல் ராணி திருச்சி
திருக்கோவில்கள் செயல் அலுவலர், அய்யம்மாள் அதிரடி மாற்றம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள, காமாட்சியம்மன் கோவில், பாலக்கரை செல்வ விநாயகர் கோவில், பெரியகடைவீதி சொர்ண பைரவர் கோவில், உறையூர் பாளையம் பஜார் சுப்பிரமணியசுவாமி கோவில், புத்தூர் திரவுபதியம்மன் கோவில், உறையூர் செல்லாயி அம்மன் கோவில், மேலபுலி வார்டு காசி விஸ்வநாதர் கோவில், மாம்பழச்சாலை ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களுக்கு செயல் அலுவலராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியவர் அய்யம்மாள்.
இவர் மீது கடந்த சில வருட காலமாக தொடர்ந்து பல்வேறு ஊழல், முறைக்கேடு, குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
திருச்சி பாலக்கரை செல்வ விநாயகர் கோவிலில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடந்தது. தற்பொழுது அந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டி இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர், மகேஸ்வரி வையாபுரி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள உயர் அலுவலர் முதல் அதிகாரிகளுக்கு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்துமாறு கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.
ஆனால் அந்த மனு மீது இந்த செயல் அலுவலர் அய்யம்மாள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் இவர் நிர்வாகத்தில் செயல்படும் கோவில்களில் புகார் மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து .தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டால் அதற்கு உண்மையான பதில் தராமல் பொய்யான தகவலை கொடுத்து வந்தார்.
காமாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் திட்டத்தில் முறைகேடு, மற்றும் பாலக்கரை செல்வ விநாயகர் கோவிலில் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முறைகேடு,மேலும் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் மற்றும் பல்வேறு கோவில்களில் வரவு செலவு விவகாரத்தில் ஊழல்.
இதுதொடர்பாக தணிக்கை குழுவிடம் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்படுவதாக தெரிகிறது.மேலும் உறையூர் நாச்சியார் கோவில் அருகிலுள்ள, செல்லாயி அம்மன் கோவில் பூசாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் அவருக்கு ஈமசடங்குக்கு உரிய நிவாரண உதவி அரசால் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது,
இதை தவிர பெரிய கடைவீதியில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் இரவு நேர காவலராக பணியாற்றி வந்த கணேசன் என்பவர் பணி ஓய்வு பெற்ற பிறகும் அவருக்குரிய பணி கொடையை இதுநாள் வரை தராமல் இழுத்தடித்து வந்தது தொடர்பாகவும்,
மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோபுர கலசங்கள் காணாமல் போய்விட்டது.
இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும்
கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் செயல்படாமல் இருந்து வந்தது.
பாலக்கரை செல்வ விநாயகர் கோவிலில். எந்தவித அனுமதியும் இல்லாமல் தன்னிச்சையாக கண்காணிப்பு கேமரா பொருத்தியது, இப்படி பல்வேறு கோவில்களில் அர்ச்சனை தட்டு, பூ, விளக்கு போன்ற கடைகளை வைக்க டெண்டர் ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது.
இதனால் இந்துசமய அறநிலையத்துறைக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஊழல் முறைகேடு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த செயல் அலுவலர் அய்யம்மாள் பற்றி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியிருந்தோம்.
இந்த புகாரின் அடிப்படையில் செயல் அலுவலர் அய்யம்மாள் மீது இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து அவரை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோவிலுக்கு இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம், தியாகி வ.உ.சி.ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகியவை முழு காரணமாகும்.
இந்த விஷயத்தில் இந்துசமய அறநிலைத்துறை செயல் அலுவலரை இடமாற்றம் செய்தாலும், அவர் திருக்கோவிலில் செய்துள்ள ஊழல், முறைகேடுகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து .அவர் மீது இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்ய உள்ளோம்.
அவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட போது இந்து சமய அறநிலையத்துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டஈடுகளை அவரிடம் இருந்து பெறும் வரை தொடர்ந்து எங்களுடைய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
என தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன். தலைவர் ஏ.வையாபுரி தெரிவித்துள்ளார்..