Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடரும். அய்யாக்கண்ணு,

0

 

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும், அதை செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக திருச்சி அண்ணாமலை நகர் மலர்ச்சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 46 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

33-வது நாளான நேற்று சவுக்கால் அடித்ததில் ரத்த காயம் ஏற்பட்டு,

34 வது நாளான இன்று அதற்கு உடலில் கட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில துணை தலைவர்கள் மேகராஜன், தட்சிணாமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர்கள் பிரேம்குமார், வரப்பிரகாஷ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பத்திரிகையாளர்களிடம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில்:

இந்த போராட்டம் 46 நாட்கள் மட்டும் அல்ல மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும் வரை இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இதில் எங்களது உயிர் போனாலும் கவலையில்லை என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.