கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் நாளை நடைபெறுகிறது.
கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் நாளை நடைபெறுகிறது.
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நாளை 13-ம் தேதி (சனிக்கிழமை) பிரவேசிக்கிறார்.
அதனை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
13-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை கணபதி பூஜை,ஹோமம், குரு பரிகாரம் ஹோமம், ஆஞ்சநேயர் காயத்ரி ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் நவக்கிரகங்கள் அபிஷேக ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகும்.
எனவே, மேற்கண்ட ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளும் வகையில்
தங்கள் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை முன்பதிவு செய்துகொண்டு ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுமென கோவில் தக்கார் பிருந்தா நாயகி, செயல் அலுவலர் ஹேமாவதி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.