மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.
மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.
1.
திருச்சி கல்லுக்குழி யில் வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மாயம்.
திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுப்பையா. (வயது 61) .இவர் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பையா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகள் ஜோதிமணி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்கு பதிந்து காணமால் போன சுப்பையாவை தேடி வருகிறார்.
2.
திருவரங்கம் மேலூரில்
மா மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி பரிதாப சாவு.போலீசார் விசாரணை
திருச்சி சிறுகமணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள்.( வயது 55). இவர் திருவரங்கம் மேலூரில் உள்ள தோட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள மா மரத்தில் திடீரென நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது சகோதரர் ஏவுரி கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3.
திருச்சி விமான நிலையம் அருகே
தனியார் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து சாவு
திருச்சி கே கே நகர் கோல்டன் அவன்யூ பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ( வயது நாற்பத்தி ஒன்பது).திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். தனியார் பள்ளியின் வரவேற்பு அறையில் பணியில் இருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு சர்க்கரை நோய் ,உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.
திருச்சி ஜங்ஷன்
ரெயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலீஸார் விசாரணை.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் பிளாட்பாரம் அருகில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து திருச்சி கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்து போன நபர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார் ?என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5.
திருச்சி பொன்மலை சர்வீஸ் ரோட்டில்
டீக்கடையில் நின்று கொண்டிருந்தவரிடம் செல்போன் பறிப்பு.
வாலிபர் கைது .
தஞ்சை மாதாகோட்டை ரோடு நடராஜ் நகரை சேர்ந்தவர் மெய்யழகன். (வயது 58). இவர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பொன்மலை சர்வீஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் செல்போனை பறித்து விட்டு ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போன் பறித்ததாக திருவரங்கம் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த கேசவராஜ் என்ற வாலிபரை கேகே நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல் போனையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது திருவரங்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
6.
திருச்சி அரியமங்கலத்தில்
இரண்டு பெண்களை கேலி கிண்டல் செய்த வாலிபர் கைது.
திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி தமிழரசி (வயது 43 ).இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் வீட்டில் இல்லாத போது அங்கு வந்த அரியமங்கலம் அம்மா குளம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் தமிழரசியின் இரண்டு மகள்களையும் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது .இது குறித்து தமிழரசி அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிந்து கேலி, கிண்டல் செய்த விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.