தீபாவளி பண்டிகை.மது விற்பனை குறைவு.மதுப் பிரியர்கள் திருந்தி விட்டார்களா அல்லது வருமானம் இல்லாத காரணமா ?
தீபாவளி பண்டிகை.மது விற்பனை குறைவு.மதுப் பிரியர்கள் திருந்தி விட்டார்களா அல்லது வருமானம் இல்லாத காரணமா ?
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது விற்பனையில் திருச்சி மண்டலம் 2 இடம்.
ரூ. 94.86 கோடிக்கு மது விற்பனை.
திருச்சி மண்டலத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 94.86கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மதுக்கடைகளில் இயங்கி வந்த மதுக்கூடங்கள் (பார்) கடந்த இரு ஆண்டுகலாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கூடங்களை திறக்க அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே மது விற்பனை களைகட்டத் தொடங்கியது.
அந்த வகையில் நிகழாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.438 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
அந்த வகையில் திருச்சி மண்டலத்திலும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தீபாவளிக்கு முந்தை நாளான நவம்பர் 3}ந்தேதி) சென்னயில் ரூ.40.69 கோடியும், மதுரையில் ரூ.47.21 கோடியும், சேலத்தில் ரூ.43.27 கோடியும், திருச்சியில் ரூ.45.29 கோடியும், கோவையில் ரூ.36.75 கோடிக்கும் விற்பனையானது.
அதைப்போலவே தீபாவளி தினத்தன்று (4}ந் தேதி) சென்னையில் ரூ.47.71 கோடி, மதுரையில் ரூ.51.68 கோடி, சேலத்தில் ரூ.48.62 கோடி, திருச்சியில் ரூ.49.57 கோடி, கோவையில் ரூ.37.71 கோடி என 2 நாட்களிலும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
மதுரை மண்டலம் ரூ.98.89 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதை அடுத்து முதலிடம் பிடித்துள்ளது,
திருச்சி மண்டலத்தில் ரூ.94.86 கோடிக்கு விற்பனையாகி இரண்டாம் இடமும், சேலம் மண்டலம் ரூ.91.89 கோடிக்கு விற்பனையாகி 3 ஆவது இடமும், சென்னை மண்டலத்தில் ரூ.88.40 கோடிக்கு விற்பனையாகி 4 ஆவது இடமும், கோவை மண்டலம் 64.46க்கு விற்பனையாகி கடைசியாக 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
தீபாவளி பண்டிகையை ஒட்டிய விற்பனையில்,
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த வருடம் மது விற்பனைசுமார் 35 கோடி ரூபாய் குறைவாக நடந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மது விற்பனை குறைவுக்கு காரணம் மது பிரியர்கள் திருந்தி விட்டார்களா அல்லது பொது மக்களின் வருமானம் குறைந்தது காரணமாக தெரியவில்லை.